வணிகம்

பெங்களூரு ஐபோன் ஆலையை அடித்து நொறுக்கிய தொழிலாளர்கள்!

Published

on

பெங்களூரூவில் இருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில், கோலார் மாவட்டத்தின் நரசபுரா பகுதியில் அமைந்துள்ள ஐபோன் தொழிற்சாலையை, தொழிலாளர்கள் அடித்து நெருக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோலார் மாவட்டத்தில் உள்ள விஸ்ட்ரோன் ஆலை, ஐபோன் உற்பத்தியைச் செய்து வருகிறது. நவம்பர் மாதத்திற்கான சம்பளத்தை இன்னும் வழங்கவில்லை என்ற காரணத்திற்காக இந்த ஆலையின் அலுவலகத்தைத் தொழிலாளர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

ஆலையின் மீது கற்களை வீசியும், ஜன்னல், கதவுகள், சோஃபா, மற்றும் பிற சாமங்களையும் தொழிலாளர்கள் அடித்து நொறுக்கிய படங்களும், காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

காவல் துறைக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்று அலுவலகத்தை அடித்து நொறுக்கிய தொழிலாளர்களைக் கைது செய்துள்ளது.

தொழிலாளர்கள் செய்தது கண்டிக்கத்தக்கது, இதுபற்றி பேசி தீர்வு காண அமைப்புகள் உள்ளன என்று கர்நாடக தொழில்துறை அமைச்சர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version