இந்தியா

10 நிமிடங்கள் அல்ல, 10 விநாடிகளில் உணவு டெலிவரி செய்த ஸ்விக்கி.. பெங்களூரில் ஒரு ஆச்சரியம்!

Published

on

உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமைட்டோ ஆகியவை போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகின்றன என்பதும் மிகவும் விரைவாக சேவை வழங்குவதில் எந்த நிறுவனம் முதல் என்பது குறித்த போட்டிதான் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி தனது வாடிக்கையாளருக்கு 10 வினாடிகளில் உணவை டெலிவரி செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பெங்களூர் நகரில் உள்ள ஒரு சில பகுதிகளில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த உணவை 10 நிமிடங்களில் வீட்டுக்கு சென்று டெலிவரி செய்யும் முறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெங்களூருக்கு வந்த கனடா நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் திடீரென உணவு சாப்பிட விரும்பினார். அவர் உடனடியாக அங்கு அருகே இருந்த ஹோட்டலுக்கு சென்றபோது ஹோட்டல் வாடிக்கையாளர்களுக்கு மூடப்பட்டு விட்டதாகவும் தற்போது சேவை இல்லை என்றும் கூறப்பட்டது.

ஆனால் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ நிறுவனத்தின் டெலிவர் பாய்கள் அங்கே நின்று கொண்டிருந்தனர். இதனை அடுத்து அவர் உடனடியாக ஸ்விக்கி நிறுவனத்திற்கு உணவு ஆர்டர் செய்தார். ஆர்டர் செய்தவுடன் டெலிவரி நபருக்கு அவரே கால் செய்து நீங்கள் இருக்கும் உணவகத்தின் வெளியே தான் நான் இருக்கிறேன் என்றும் நீங்கள் வெளியே வந்து உணவை கொடுத்தால் போதும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ கால் மூலம் இந்த உரையாடல் நடந்த நிலையில் அவரது உணவு தயாராக இருந்ததால் அடுத்த பத்து வினாடிகளில் அவர் வெளியே வந்து அந்த கனடிய சுற்றுலா பயணி ஆர்டர் செய்த உணவை கொடுத்துள்ளார். உணவு ஆர்டர் செய்த அடுத்த 10 வினாடிகளில் டெலிவரி ஆனது என்பது மிகப்பெரிய சாதனை என்றும் கூறப்பட்ட நிலையில் இது குறித்த வீடியோவை அந்த டெலிவரி பாய் தனது youtube பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஸ்விக்கி நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதற்கு இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் உதவி செய்வதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோவில் அந்த கனடா வாடிக்கையாளர் பேசியபோது, எனது ஆர்டரை எனக்கு கொண்டு வந்து கொடுத்தவர் சஞ்சய் என்றும் நான் உணவு ஆர்டர் செய்த 10 வினாடிகளில் எனக்கு கொடுத்துவிட்டார் என்றும் அவருக்கு வாழ்த்து தெரிவியுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான நெட்டிசன்கள் லைக்ஸ் செய்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version