ஆரோக்கியம்

உங்களின் ஆரோக்கியத்திற்கு வேப்பிலை அளிக்கும் நன்மைகள்!

Published

on

• வேப்பங்கொழுத்தை, பசு மோர் விட்டு அரைத்து தீக்காயத்தில் பூசினால், காயம் சீக்கிரம் ஆறும்.

• வேப்பங்கொழுந்தை அரைத்து, எருமை தயிரில் கலந்து மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால், தொண்டைக்கமறல் குணமாகும்.

• வேப்பிலை கொழுந்தை இடித்து, சாறு பிழிந்து, அதில் சிறிது தேனை சேர்த்து இரவு உணவுக்கு ஒரு மணி நேரம் கழித்து சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.

வேப்பிலையின் நன்மைகள்:

• வேம்பு பல மருத்துவ பலன்களை கொண்டது. வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து கசாயமாக அருந்தலாம்; வேப்பங் கொழுந்தை அப்படியே மென்றும் சாப்பிடலாம்.

• இதிலுள்ள கசப்பு சுவை குடற்புழுக்களை வெளியேற்றும், மேலும், இது சிறந்த எதிர்ப்பு சக்தியாகவும் செயலாற்றும். வேப்பிலையை அரைத்து, அதை தேய்த்து குளிப்பதன் மூலம், உடலில் உள்ள கிருமிகள் நீங்கும்.

வேப்பம்பூ:

வேப்பம்பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுத்தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண்ணும் குணமாகும்.

Trending

Exit mobile version