ஆரோக்கியம்

இந்த இலைச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

Published

on

ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்றவைத்து, தேன் கலந்து அருந்தலாம்.

துளசி இலைச் சாற்றையும், தேனையும் வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர இதய பிரச்சனைகள் நீங்கும். சைனஸ் பிரச்சனைக்கு 15மிலி துளசி இலைச்சாற்றுடன் தேன் கலந்து உண்ணலாம்.

மாதுளை சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட நரம்பு நோய்கள் தீரும். மாதுளம் பிஞ்சை தயிருடன் சேர்த்து மை போல் அரைத்து சாப்பிட்டால் ரத்த பேதி குணமாகும். மாதுளைச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட இதயம் வலுவடையும்.

முருங்கை இலைச்சாற்றில் தேன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட மாரடைப்பு ஏற்படும அபாயம் குறையும்.

உணவே மருந்து என்று சொல்வதற்கு இஞ்சியும், பூண்டும் முக்கிய உதாரணம். இவை இரண்டும், உடலுக்கு எல்லா வகையிலும் இயற்கை மருந்தாக பயன்படுகின்றன. இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version