ஆரோக்கியம்

பப்பாளி சாப்பிட்டால் ஏற்படும் சில நன்மைகள்!

Published

on

எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

பப்பாளியை உண்பவர்கள் பெரும்பாலும் அழகு கூடும். தேகம் பளபளப்பாகும் என்ற எண்ணத்திலேயே அதை எடுத்து கொள்கிறார்கள்.

ஆனால், வைட்டமின் ஏ அதிகளவு நிறைந்துள்ள பப்பாளியை சாப்பிடுவதால் செரிமானத் திறன் அதிகரிக்கும். உடலின் ரத்தத்தை சுத்திகரித்து வயிற்றுப் புழுக்களை அழிக்கும். தினம் ஒரு துண்டு பப்பாளிப்பழம் சாப்பிட்டு வர கண்பார்வை பளிச்சிடுவதோடு மலச்சிக்கலும தடைபடுகிறது.

எளிதில் ஜீரணமாகும். இதய நோய் வராமல் தடுக்கும். புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், பப்பாளியில் கொழும்பு மிகக் குறைவு, ஊட்டச்சத்து மேம்படும், கால்சியம், மக்னீசியம் அதிகம் நிறைந்தவை, எலும்புகளை வலிமையாக்கி உடல் வளர்ச்சியை துரிதமாக்கும்.

seithichurul

Trending

Exit mobile version