ஆரோக்கியம்

தினமும் இதனை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

Published

on

• தினமும் வாழைத்தண்டுச் சாறு அருந்துவதால் சிறுநீரகத்தின் செயல்திறன் கூடும், நீரகக் கற்கள் வெளியேறும்.

• தினமும் கொய்யாப்பபழமும், நெல்லிக்காயும் இரண்டையும் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். நெல்லிக்காயை தேனில் ஊறவைத்தும் சாப்பிடலாம்.

• தினமும் தழுதாழை இலைச்சாற்றை காலை, மாலை தலா 2 முதல் 3 தேக்கரண்டி அருந்திவந்தால் காய்ச்சல் நீங்கும். தழுதாழை இலைச்சாற்றை சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து, தினமும் ஒன்றிரண்டு தேக்கரண்டி உட்கொள்ள மேக நோய்கள் நீங்கும். இரவு படுக்கைக்கு செல்லும் முன் தழுதாழை இலையை வதக்கி வலி, வீக்கம் ஏற்பட்ட இடங்களில் கட்டுப்போட்டுவர பிரச்சினை தீரும். மேலும், சொறி, சிரங்கு, உடல்கடுப்பு, குடைச்சலை

• தினமும் கடுக்காய் சாறு அருந்திவர முக நிறம் நல்ல பொலிவாகும். கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் நல்லது.

• தினமும் முடக்கத்தான் சாறு அருந்திவர மூட்டு வலி, வாயு தொல்லைக்கு நல்லது.

• தினமும் ஆடாதோடை சாறு அருந்திவர ஆஸ்துமாவை குணப்படுத்தும்.

• தினமும் கரிசலாங்கண்ணி சாறு அருந்திவர கண் பார்வைக்கு நல்லது.

• தினமும் இஞ்சியை தோல் சீவி, சின்ன துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு அதிகமாகும்.

• தினமும் கீழாநெல்லி சாறுடன் தேன் கலந்து பருகினால் சிறு நீரக வீக்கம் குறையும். கற்கள் உடைந்து வெறியேறும்.

• தினமும் பரங்கிக்காய் சாற்றை தினம் 3 முறை அரை டம்ளர் பருகுவதால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.

• தினமும் சீத்தாப்பழத்தை கர்ப்பிணிகள் தினமும சாப்பிட்டு வர, சிசுவின் வளர்ச்சி ஆரோக்கியமாக அமையும். இப்பழத்தின் நார்ச்சத்து 5.10 கிராம் அளவு உள்ளது. எனவே, மலச்சிக்கல் குறைபாட்டைச் சரி செய்து, வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள இந்தக் கனி பயன்படுகிறது. மேலும், பெண்களுக்கு மிகவும் ஏற்ற மருத்துவ குணம் நிறைந்த கனியாக திகழ்கிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version