ஆரோக்கியம்

தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

Published

on

தயிர் ஒரு அருமருந்து, முக்கியமாக நல்ல ஜீரண சக்தி தருவது தயிர்தான். தயிலில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை வட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். தயிர் விரைவாக ஜீரணமாகக் கூடியது.
தயிர் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதில் முக்கியமான வைட்டமின் சத்துக்களும், புரதச் சத்துகளும் உள்ளது. வயிற்றுப்போக்கு வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் அடங்கும்.
ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றைத் தயிர் கலந்து நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது. மேலும் இது சுவையிருந்த நாவிற்குச் சுவையூட்டும். தயிரைச் சூடாக்கிப் பயன்படுத்தக் கூடாது.
சருமம் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடல் சூடு நீங்கத் தயிரைக் கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கிக் குடிக்கவும்.
தயிரை சில நிமிடங்கள் தலையில் வைத்து அலசி வரப் பளபளப்பான கூந்தலைப் பெறலாம். ஆனால் தலைவலி, சளி பிரச்சனைகள் உள்ளவர்கள் தயிர் கொண்டு தலைமுடியை அலசக் கூடாது.
2 ஸ்பூன்  தயிருடன் கால் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து காலை, மாலை சாப்பிட பின் வரும் நன்மைகள் உண்டு. அல்சர் குணமாகும். தோல் நோய்களைப் போக்கும்.
உடலில் தேவையற்ற முடி வளர்வதைத் தடுக்கிறது. நுரையீரல் நோய்களைக் குணப்படுத்தும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தி குடலில் சேர்ந்த கிருமிகளை வெளித்தாளும்.
மழைக் காலத்தில் இரவில் தயிர் சேர்க்கக் கூடாது. குளிர்காலத்தில் தினமும் பயன்படுத்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். இரவில் தயிர் உண்பது அசீரணத்தை ஏற்படுத்தும்.

Trending

Exit mobile version