ஆரோக்கியம்

‘பேரீச்சை’ பிறவிக் குறைப்பாட்டையே வெல்லும்.. அடேங்கப்பா இவ்வளவு நன்மைகளா?

Published

on

பேரீச்சையில் ஃபோலிக் அமிலமும் அதிகம் இருப்பதால் கர்ப்பிணிகக்கு சிறந்தது. கருப்பைச் சுவர்களை சுருங்கி விரியச் செய்யும் ஆக்சிடோசின் ஹார்மோனை ஒத்த ஒரு பொருன் இதில் இருக்கிறது.

மேலும், பால் சுரத்தலையும் இது தூண்டுகிறது. பொட்டாசியம், க்ளைசின், த்ரியோனின் போன்ற நுண்சத்துகள் பால் சுரத்தலுக்கு காரணமான ப்ரொலாக்டின் ஹார்மோன் சுரப்பை தூண்டுகின்றன. இதிலிருக்கும் இரும்புச்சத்து ரத்தசோகையை தடுக்கும்.

பேரீச்சையில் இயல்பாகவே அதிகமிருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து, இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. இதிலுள்ளள (பீட்டா-D-க்ளூக்கன்) நார்ச்சத்து நீருடன் எளிதாக கலந்து சக்கையை அதிகரித்து, குடல் இயக்கத்தை எளிதாக்கி, மலச்சிக்கலை தடுக்கிறது.

நல்ல பலன் கொடுக்க, கொட்டை நீக்கப்பட்ட பேரீச்சையை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் அந்த நீருடன் சேர்த்து பழத்தையும் உட்கொள்ளவும்.

seithichurul

Trending

Exit mobile version