ஆரோக்கியம்

சுரைக்காயில் இத்தனை நன்மைகளா? ஆச்சரியமூட்டும் தகவல்கள்!

Published

on

சுரைக்காயில் வைட்டமின் பி,சி சத்துகள் உள்ளன. காமாலை நோய்க்கு மருந்து. நரம்புகளுக்குப் புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். அஜீரணகோளாறு உள்ளவர்கள் சுரைக்காயைச் சாப்பிடலாம்.

வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க, சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாகக் குறையும்.

சுரைக்காயை உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும், வெப்ப நோய்கள் அண்டாது.

மதிய உணவுடன் சுரைக்காய் ஜுஸ் அருந்த வந்தால் பித்தம் சமநிலை அடையும்.

சுரைக்காய் உணவு நரம்புகளுக்குப் புத்துணர்வு கொடுத்து, உடலை வலுப்படுத்தும். கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்த கட்டினால் எரிச்சல் குறையும்.

Trending

Exit mobile version