ஆரோக்கியம்

இந்த முறையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

Published

on

• காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வற்தால், வயிற்றில் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையை பெறலாம்.

• இந்த கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் இ, போன்ற சத்துகளும் விட்டமின்களும் நிறைந்து காணப்படுகிறது.

• வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது. குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு. கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது. கறிவேப்பிலை இலைகளில் வைட்டமின் – ஏ நிறைந்து காணப்படுகிறது. முடியை வலுவாக்குகிறது. செரிமான மண்டலத்திற்கு நல்லது.

• சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

• ரத்தசோகை உள்ளவர்கள் காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொ ண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து ரத்தசோகை நீங்கும்.

• சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேனை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள சறி முறிந்து வெறியேறிவிடும்.

• கறிவேப்பிலை இதய நோய், பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சினையில் இருந்தும் பாதுகாப்பு தரும்.

• கறிவேப்பிலையின் இலை, வேர், பட்டை, தண்டு மற்றும் பூக்களைத் தண்ணீரில் கொதிக்க வைத்துப் பருகினால் வயிற்றில் இருக்கும் அனைத்து விதமான தொந்தரவுகளிலிருந்தும் விடுபட முடியும்.

 

seithichurul

Trending

Exit mobile version