கிரிக்கெட்

‘இந்தியாகிட்ட 4வது டி20ல தோத்து போனது நல்லதுதான்’- ஸ்டோக்ஸ் அதிர்ச்சி கருத்து

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்றைய 4வது டி20 போட்டியில் இந்தியா, 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2 – 2 என்று சமநிலை வகிக்கிறது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ், 31 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார். அதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த தோல்வி பற்றி இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் பென் ஸ்டோக்ஸ், ‘டி20 உலகக் கோப்பை இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்க உள்ளது. அதற்கு முன்னர் மிக அழுத்தம் நிறைந்த போட்டிகளில் விளையாடி நாங்கள் பயிற்சி பெற்றாக வேண்டும். அப்படி பயிற்சி பெறுவதன் மூலம் எங்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். 

அப்படியான விஷயத்தை வைத்துப் பார்க்கும் போது, நாங்கள் 4வது டி20 போட்டியில் இந்தியாவிடம் தோற்றது நல்ல விஷயம்தான். இப்போது கடைசி போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே தொடரையும் கைப்பற்றும் நிலை ஏற்படும். அந்தப் போட்டியில் வென்று தொடரையும் வெல்ல வேண்டும் என்பது தான் எங்களின் இலக்கு’ என்று கூறியுள்ளார். 

Trending

Exit mobile version