கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் திடீர் விலகல்: என்ன காரணம்?

Published

on

ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதும் இதுவரை ஐந்து போட்டிகள் நடைபெற்று உள்ளது என்பதும் தெரிந்ததே. இதுவரை நடந்த போட்டிகளில் டெல்லி, மும்பை, பஞ்சாப், பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்று இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளன. ராஜஸ்தான், ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய அணிகள் இன்னும் ஒரு வெற்றிக்கு வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரரான பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12ஆம் தேதி மும்பையில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தின் போது பென் ஸ்டோக்ஸுக்கு திடீரென இடது கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் அவர் இரண்டு மாதங்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என்றும் அதுவரை அவர் கிரிக்கெட் விளையாட கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனை அடுத்து ஐபிஎல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகுவதாகவும் இனி வரும் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்றும் ராஜஸ்தான் அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் அவர் நாடு திரும்ப மாட்டார் என்றும் அணியுடன் இணைந்து செயல்படுவார் என்றும் சக வீரர்களுக்கு டிப்ஸ்கள் கொடுத்து அணியின் வெற்றிக்காக அவர் ஐடியா கொடுப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இருப்பினும் அதிரடி ஆட்டக்காரரும், ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது. கடந்த 12ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 3-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார் என்பதும், அதேபோல் அவர் ஒரே ஒருவர் மட்டுமே பந்து வீசினார் என்பதும் தெரிந்ததே.

seithichurul

Trending

Exit mobile version