கிரிக்கெட்

INDvENG – “இந்தியா ரொம்ப டஃப்புங்க..!”- புலம்பும் பென் ஸ்டோக்ஸ்

Published

on

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக தற்போது தான் விளையாடும் இந்த டெஸ்ட் தொடரை, இதுவரையிலான தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த மிகக் கடினமான சூழலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நேற்று இங்கிலாந்து அணியை 205 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்தியா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

ஆனால் இன்று காலை முதல் இந்தியாவுக்கு சூழல் சாதகமாக அமையவில்லை. இதுவரை 5 விக்கெட்டுகள் இழந்துள்ள இந்திய அணி, 130 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

தற்போது விக்கெட் கீப்பர் ரிஷப் பன்டும், ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வினும் விளையாடி வருகிறார்கள். இன்னும் அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மட்டுமே பேட்டிங் செய்யக் கூடிய திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

இந்த இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட 100 ரன்களாவது அதிகம் எடுத்தால் தான் இந்தியாவால், வெற்றியை உறுதி செய்ய முடியும். இல்லையென்றால் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளித்து வெற்றியை நிலைநாட்டுவது கடினமான காரியமாக மாறிவிடும்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடர் குறித்துப் பேசியுள்ள பென் ஸ்டோக்ஸ், ‘இதுவரை நான் சுமார் 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஆனால் இதைப் போன்று ஒரு கடினமான சூழலில் நான் விளையாடியது கிடையாது.

இந்தியாவில் விளையாடுவது என்பது எப்போதும் கடுமையானதாகத் தான் இருக்கும். நான் உலகம் முழுக்க விளையாடியுள்ளேன். அதே நேரத்தில் ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தாற் போல உங்களின் விளையாட்டு அணுகுமுறையையும் திறனையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அதை நான் செய்வேன்’ எனக் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version