உலகம்

கிங்கான் உடன் காதல்: பெண்ணுக்கு அனுமதி மறுப்பு!

Published

on

கிங்காங் என்ற மனித குரங்கு உடன் காதல் வயப்பட்ட பெண்ணுக்கு வனவிலங்கு பூங்காவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெல்ஜியம் நாட்டில் உள்ள வனவிலங்கு பூங்காவுக்கு அடிய் திம்மெர்மன்ஸ் என்ற பெண் அடிக்கடி செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் அந்த பூங்காவில் உள்ள 38 வயதான கிங்காங் என்ற மனித குரங்கு உடன் அடிய் திம்மெர்மன்ஸ் அடிக்கடி பழகியதாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் அந்த கிங்காங் உடன் அடிய் திம்மெர்மன்ஸ் காதல் வயப்பட்டதால் தெரிகிறது. தினசரி வனவிலங்கு பூங்காவில் கிங்காங் உடன் அதிக நேரம் அடிய் திம்மெர்மன்ஸ் செலவு செய்துள்ளார். இருவரும் அதிக நேரங்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருந்த நிலையில் ஒருகட்டத்தில் இருவரும் முத்தங்களை பரிமாறிக் கொண்டதாக தெரிகிறது.

இதனை பார்த்த பூங்கா நிர்வாகம் அதிர்ச்சி அடைந்து அடிய் திம்மெர்மன்ஸ் இனிமேல் வனவிலங்கு பூங்காவுக்கு வரக்கூடாது என்று எச்சரித்தது. சிட்டாங் என்ற அந்த மனிதகுரங்கு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால் மற்ற மனித குரங்குகளுடன் பழகாமல் தனியாக இருப்பதாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அடிய் திம்மெர்மன்ஸ் கூறியபோது ’நான் அந்த மனித குரங்கை உண்மையாகவே காதலிக்கிறேன். அவனும் என்னை காதலிக்கிறான். எங்களிருவரையும் ஏன் பூங்கா நிர்வாகிகள் பிரிக்கின்றனர் என்று தெரியவில்லை. எங்களது உணர்வுகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து வனவிலங்கு அதிகாரிகள் கூறியபோது ’அந்த பெண்ணுடன் ஏற்பட்ட காதலுக்கு பின்னர் அந்த மனித குரங்கு மனிதர்களை மட்டுமே கவனிக்க தொடங்கியுள்ளது. சக மனித குரங்குகளை கவனிப்பதில்லை. மனித குரங்குகள் மனித குரங்குகளுடன் இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதனால்தான் இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்று கூறியுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version