தமிழ்நாடு

என் கூட வந்தால் தினமும் 2000 ரூபாய் வருமானம் கிடைக்கும்: கடைக்காரரை அழைத்த பிச்சைக்காரர்

Published

on

பிச்சை கேட்கும் பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை போட மறுத்த கடைக்காரரிடம் நீங்கள் வேண்டுமானால் என்னுடன் பிச்சை எடுக்க வாருங்கள் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதுகுறித்து வைரலாகும் வீடியோ ஒன்றில் பிச்சைக்காரர் கடைக்காரரிடம் பிச்சை கேட்கிறார். அதற்கு அந்த கடைக்காரர் கைகால் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது, வேலைக்கு செல்லலாமே என்று கூறினார். அதற்கு அந்த பிச்சைக்காரர் வேலைக்கு வந்தால் எவ்வளவு சம்பளம் கொடுப்பீர்கள் என கேட்க தினமும் 400 ரூபாய் கொடுக்கிறேன் என்று கூறினார்

ஆனால் அதற்கு அந்த பிச்சைக்காரர் நான் தினமும் 2,000 ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதிக்கிறேன், உங்களிடம் எதற்காக நான் 400 ரூபாய்க்கு வேலை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்

மேலும் நீங்கள் வேண்டுமானால் என்கூட பிச்சை எடுக்க வாருங்கள், உங்களுக்கும் 2000 ரூபாய் நான் சம்பாதித்து தருகிறேன் என்று கூறியது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

 

seithichurul

Trending

Exit mobile version