இந்தியா

‘பிச்சை எடுங்க, திருடுங்க…’- ஆக்ஸிஜன் தட்டுப்பாடு; கடுப்பில் மத்திய அரசிடம் கறார் காட்டிய நீதிமன்றம்

Published

on

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் முறையான ஆக்ஸிஜன் சப்ளை இல்லாத காரணத்தினால் கடந்த சில நாட்களில் மட்டும் பலர் உயிரிழந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஆக்ஸிஜன் சப்ளை மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும், இதன் காரணத்தால் பல கொரோனா நோயாளிகள் உயிரிழக்க நேரிடும் என்றும் அஞ்சப்படுகிறது. இதைத் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு முறையாக ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்பட வேண்டும் எனக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ‘ஒருசில மருத்துவமனைகள்தான் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக நீதிமன்றத்தை அணுகியுள்ளன. ஆனால், ஆக்சிஜன் தேவை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாகத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்று கண்டிப்புடன் கூறினர்.

மேலும், நீங்கள் உங்களுக்குத் தேவையான இனிமையான நேரத்தைப் பொறுமையாக எடுத்துக் கொள்ளுங்கள். மக்கள் இங்கே மடிந்து கொண்டு இருக்கட்டும். இப்படி ஓர் இக்கட்டான நேரத்தில் வேறெங்கெல்லாம் ஆக்சிஜன் இருக்கிறதோ அங்கெல்லாம் பிச்சை எடுங்கள், கடனாகக் கேளுங்கள், இல்லை திருடுங்கள்’ என்று மத்திய அரசைக் காட்டமாக சாடியுள்ளது. 

Trending

Exit mobile version