உலகம்

தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு பீர், பாப்கார்ன்: குவியும் கூட்டம்!

Published

on

இந்தியா உட்பட உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மிக அதிகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது, குறிப்பாக அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது

இருப்பினும் தடுப்பூசி போடுவதற்கு ஒரு சிலருக்கு இன்னும் தயக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனை அடுத்து ஒரு சில சலுகைகளை வழங்கி தடுப்பூசி போட ஊக்குவிக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்காவில் உள்ள ஒரு சில இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் அவர்களுக்கு பீர், டோனட், பாப்கார்ன் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது

இந்த இலவச பொருள்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு 2 கிலோ தக்காளி உள்பட ஒருசில பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது போன்ற இலவச பொருட்களை மக்களுக்கு கொடுப்பதாக பல நாடுகளில் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version