சினிமா செய்திகள்

’பீஸ்ட்’ படத்தின் சூப்பர் அப்டேட்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

Published

on

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவுக்கு வந்தது என்பதும் தற்போது விஜய்யின் டப்பிங் பணிகள் உள்பட அனைத்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

வலிமை உள்பட பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ’பீஸ்ட்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்குமா? புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ’பீஸ்ட்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’பீஸ்ட்’ படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்து உள்ளது.

இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது என்பதும் இன்று மாலை வெளிவரப்போகும் நாட்டிற்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version