சினிமா செய்திகள்

இசையமைப்பாளராக மாறிய விஜய்: கலாய்த்த நெல்சன், வைரல் புகைப்படம்!

Published

on

இசை அமைப்பாளராக விஜய் மாறிய புகைப்படம் ஒன்றை இயக்குனர் நெல்சன் கலாய்த்ததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு நடைபெற்றபோது ஓய்வு நேரத்தில் விஜய் அங்கிருந்த இசைக்கருவிகளில் ஒன்றான ட்ரம்ஸ் எடுத்து வாசித்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த விடிவி கணேஷ், சாக்சோபோனை எடுத்து இதை வாசியுங்கள் என்று கூறியதாகவும் உடனே விஜய் அதையும் வாசித்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் விஜய் டிரம்ஸ் மற்றும் சாக்சோபோனை வாசிப்பது தெரிந்ததும் பூஜா ஹெக்டே, நெல்சன் உள்பட படக்குழுவினர் அவரை சுற்றி வந்து விட்டனர். இந்த காட்சியை கேமராமேன் ஒருவர் புகைப்படம் எடுத்ததாகவும், இதனையடுத்து அந்த கேமிராமேனை கலாய்த்த நெல்சன் இந்த புகைப்படத்தை பத்திரமாக வைத்திருங்கள் 100வது நாள் விழாவின் போது வெளியிடுவோம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த புகைப்படம் தற்போது முன்னணி தமிழ் வார இதழ் ஒன்றில் வெளிவந்த நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version