சினிமா செய்திகள்

‘பீஸ்ட்’ இசை வெளியீட்டு விழா இல்லை தான்: ஆனால் ரிலீஸ் தினத்தில் ஒரு செம விருந்து!

Published

on

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இல்லை என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் அதே நேரத்தில் சன் டிவியில் இந்த படம் குறித்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்று கண்டிப்பாக நடைபெறும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அந்த செய்தி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படத்தின் குழுவினர்களுடன் நடத்திய உரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது என்றும், இந்த உரையாடல் நிகழ்ச்சியில் விஜய், நெல்சன், அனிருத், பூஜா ஹெக்டே உள்பட படக்குழுவினர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இசை வெளியீட்டு விழாவின் போது ரசிகர்கள் விஜய்யின் உரையாடலை கேட்கலாம் என்று காத்திருந்த நிலையில் அதற்கு பதிலாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் இதுபோன்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சி உண்டு என்றாலும் இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்வதால் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version