சினிமா செய்திகள்

வெள்ளத்தில் சேதமடைந்ததா விஜய்யின் ‘பீஸ்ட்’ ஷாப்பிங் மால் செட்?

Published

on

தளபதி விஜய் நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் அடுத்த மாதத்துடன் முடிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் ‘பீஸ்ட்’ படத்திற்காக பல கோடி செலவில் அமைக்கப்பட்ட மால் செட் ஒன்று போடப்பட்டு உள்ளது என்பதும் இந்த செட்டில் தான் கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் பெய்த கனமழை காரணமாக இந்த செட் வெள்ளத்தால் சூழ்ந்து உள்ளது என்றும் இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

‘பீஸ்ட்’ பட செட்டை வெள்ளம் சூழ்ந்துள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது ச்எட்டை வெள்ளம் சூழ்ந்து இருந்தாலும் செட்டுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் வெள்ள நீர் அகற்றப்பட்ட உடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறினார்கள்.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக செல்வராகவன் மற்றும் முக்கிய கேரக்டர்களில் யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version