சினிமா செய்திகள்

இரண்டே நாட்களில் 400 திரையரங்குகளில் தூக்கப்பட்ட பீஸ்ட்: அனைத்திலும் ‘கேஜிஎப் 2’

Published

on

தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி தமிழகத்தில் சுமார் 850 திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் இரண்டே நாட்களில் 400 திரையரங்குகளில் பீஸ்ட் தூக்கப்பட்டதாக வெளியாகும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கேரளாவில் 600 திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் திரையிடப்பட்டது .

ஆனால் இரண்டே நாட்களில் கூட்டம் இல்லாததால் 400 திரையரங்குகளில் தூக்கப்பட்டு விட்டது. அதற்கு பதில் ‘கேஜிஎப் 2’ திரைப்படம் திரையிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

தமிழகத்திலும் இரண்டே நாட்களில் சுமார் 200 திரையரங்குகளில் பீஸ்ட் படத்திற்கு பதில் கேஜிஎப் திரைப்படம் திரையிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் திரைப்படம் ஒன்று இரண்டே நாட்களில் இவ்வளவு அதிகமான திரையரங்குகளில் தூக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என கூறப்பட்டு வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version