சினிமா

திடீரென வெளியாகிய பீஸ்ட் பட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ… செம வைரல்….

Published

on

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’. படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. முதல் கட்டப்படப்பிடிப்பு ஜார்ஜியா, சென்னை மற்றும் டெல்லியில் நடைபெற்றது. தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் புதிதாக இயக்குனர் செல்வாராகவனும் இணைந்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் அவர் டெரர் வில்லனாக நடித்துள்ளாராம். இப்படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் மற்றும் டாக்டர் படத்தில் நடித்த ரெட்டிங் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி என பலரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தின் 100வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அபர்ணா தாஸ் மற்றும் ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் தங்களின் டிவிட்டர் பக்கதில் பகிர்ந்துள்ளனர். இதில் அனைவரு ஜாலியாக பாட்டு போடுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும், விஜய் பார்ப்பதற்கு செம க்யூட்டாக இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version