சினிமா செய்திகள்

பிரியங்கா மோகனை அடுத்து ‘தலைவர் 169’ படத்தில் இணையும் டாக்டர், பீஸ்ட் நட்சத்திரங்கள்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 169’ திரைப்படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் தெரிந்ததே. மேலும் அனிருத் இசையமைக்க இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது நெல்சனின் முந்தைய படமான ’டாக்டர்’ மற்றும் ’பீஸ்ட்’ படங்களில் பணியாற்றிய சிலர் ’தலைவர் 169’ படதிலும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது

முதற்கட்டமாக ‘டாக்டர்’ படத்தின் நாயகி பிரியங்கா அருள்மோகன், ‘ தலைவர் 169’ படத்தில் ரஜினியின் மகள் கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ரெடின்கிங்ஸ்லி மற்றும் யோகிபாபு ஆகிய இருவரும் இந்த படத்தில் இணையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ’டாக்டர்’ மற்றும் ’பீஸ்ட்’ படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தொழில்நுட்ப கலைஞர்களை பொருத்தவரையில் ’டாக்டர்’ மற்றும் ’பீஸ்ட்’ படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் தான் ‘தலைவர் 169’ படத்திலும் பணிபுரியவுள்ளதாக கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version