சினிமா செய்திகள்

’வலிமை’ படத்தை ‘பீஸ்ட்’ முந்துமா? வாய்ப்பே இல்லை என கூறும் நெட்டிசன்கள்!

Published

on

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக அதிக திரையரங்குகளில் அதாவது 900க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தங்களை தாங்களே பத்திரிக்கையாளர் என்று கூறிக்கொள்ளும் யூடியூப் நடத்தும் போலி செய்தியாளர்கள் சிலர் இந்த படம் 600 திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் ஆனது என வேண்டும் என்றே பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் ’வலிமை’ படம் தொள்ளாயிரத்து க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் ஆனதையடுத்து அதைவிட ஒரு தியேட்டரில் அதிகமாக ‘பீஸ்ட்’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என விஜய் பக்கா ப்ளான் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது

ஏப்ரல் 14 அன்று ‘பீஸ்ட்’ வெளியாகவிருக்கும் நிலையில் அதே தேதியில் கேஜிஎப் 2 வெளியாக இருப்பதால் அதற்கு வாய்ப்பே இல்லை என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்

ஒருவேளை ஏப்ரல் 13-ம் தேதி அன்று ‘பீஸ்ட்’ படத்தை ரிலீஸ் செய்தாலும் அந்த படத்திற்கு 900 தியேட்டர்கள் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் ஒரே ஒருநாள் மட்டும் 900 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனதை வைத்து வலிமை படத்தின் சாதனையை முறியடித்ததாக கூற முடியுமா என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version