தொழில்நுட்பம்

உஷார் மக்களே, உஷார்… ‘Pink WhatsApp’ என்னும் பெயரில் தகவலைத் திருடும் புது மோசடி! 

Published

on

நமது மொபைல் போன் அல்லது கணினிகளில் சேமித்து வைத்திருகுகம் தகவல்களைத் திருட பல்வேறு வைரஸ்களை கருப்புச் சந்தையிலிருந்து ஹேக்கர்கள் தொடர்ந்து உருவாக்கி உலவவிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் புதிய வரவாக வந்துள்ளது WhatsApp Pink என்னும் வைரஸ். 

மால்வேர் வகை வைரஸான இது, வாட்ஸ்அப்பில் ஒரு இணையவழி லிங்க் போல் அனுப்பி வைக்கப்படுகிறது. அதை க்ளிக் செய்து உள்நுழையும் பட்சத்தில், மொபைல் அல்லது கணினியில் உள்ள மொத்த டேட்டாக்களும் கபளீகரம் செய்யப்படுகிறது.

மேலும் உங்கள் டிவைஸில் வைத்திருகுகம் அத்தனை தரவுகள் மற்றும் தகவல்களும் திருடப்படுகின்றன. இந்த WhatsApp Pink என்பது புதிய வகை வாட்ஸ் அப் என்னும் போலி விளம்பரத்தின் மூலம் பல இடங்களில் அதன் லிங்குகள் பகிரப்பட்டு வருகின்றன.

பலரும் இதை அறியாமல் இரையாகி வருகின்றனர். எனவே, இதைப் போன்று பெயர் அறியாத, சந்தேகத்திற்கு இடம் கொடுக்கக்கூடிய வகையில் எதாவது புதிய லிங்குகள் பகிரப்பட்டால் அதிலிருந்து விலகியே இருப்போம். 

Trending

Exit mobile version