தமிழ்நாடு

பி.இ, பி.டெக். படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் இதுதான்: முக்கிய அறிவிப்பு

Published

on

பி.இ, பி.டெக். போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி குறித்த விவரங்களை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2021 – 22 ஆம் கல்வி ஆண்டுக்கான பி.இ, பி.டெக். படிப்புகளுக்கு செப்டம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சேலம், பர்கூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி, கோவையிலுள்ள கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் பிஇ பிடெக் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேற்கண்ட கல்லூரிகளில் பிஇ பிடெக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஆன்லைன் மூலம் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் இணையதள வசதி இல்லாதவர்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்த விவரங்களை www.ptbe-tnea.com என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 94869 77757, 0422-2574071, 2574072 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது

seithichurul

Trending

Exit mobile version