கிரிக்கெட்

தோனியை 7-வது வீரராக களமிறக்கியது ஏன்? கோலி, ரவிசாஸ்திரியிடம் பிசிசிஐ சரமாரி கேள்வி!

Published

on

நேற்று முன்தினம் நடந்து முடிந்த இந்தியா, நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி வெற்றிபெற்றதின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் கோலி மற்றும் ரவிசாஸ்திரியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

இந்திய அணியின் தோல்வி குறித்து ஆராயப்பட்டு அவை விமர்சிக்கப்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்றாக தோனியை பின்வரிசையில் களமிறக்கியது உள்ளது. இந்தியாவின் முன்வரிசை விக்கெட்டுகள் குறிப்பாக முதல் மூன்று விக்கெட்டுகள் தொடக்கத்திலேயே விழுந்துவிட்டது. இது தான் இந்திய அணிக்கு முதல் எதிரியாக மாறியது. ஆனால் விக்கெட் இழப்பு தொடர்வதை தடுக்க தோனியை முன்னரே களமிறக்காதது ஏன் என தற்போது கேள்வி எழும்பியுள்ளது.

தோனியை முன்னரே அதாவது, ரிஷப் பண்ட் களமிறங்குவதற்கு முன்னரே களமிறக்கியிருந்தால் அவர் மற்ற வீரர்களை சிறப்பாக கையாண்டு விளையாட வைத்திருப்பார் அணியையும் சுலபமாக வெற்றிபெற வைத்திருப்பா என முன்னாள் வீரர்கள் சச்சின், கங்குலி, லக்ஷ்மனன் உள்ளிட்டோர் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை தற்போது இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கையிலெடுத்துள்ளது. எதற்காக தோனி 7-ஆம் இடத்தில் இறக்கப்பட்டார் என்பது குறித்து ரவி சாஸ்திரி உடனடியாக விளக்கம் தர வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது. மேலும் முன்னாள் கேப்டன் கபில் தேவ்வும் இந்த விவகாரத்தில் கோலியையும், அணி நிர்வாகத்தையும் கேள்வி எழுப்பியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version