கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு ஒரு அணி; ஆசிய கோப்பைக்கு ஒரு அணி; பிசிசிஐ-யின் பலே திட்டம்

Published

on

வரும் ஜூன் மாதம் கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதே காலக்கட்டத்தில் ஆசிய கோப்பைத் தொடரும் நடத்தப்படலாம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியால், ஆசிய கோப்பையில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்படும் என்று தெரிகிறது. இதைச் சமாளிக்க ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளதாம் பிசிசிஐ.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஆசிய கோப்பை தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இந்திய அணி ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட உள்ளதால் ஆசிய கோப்பை தொடரில் எப்படி விளையாட முடியும் என்ற குழப்பத்தில் பிசிசிஐ உள்ளது.

மேலும் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதால் இந்திய அணி இங்கிலாந்திலே தங்க திட்டமிட்டுள்ளது. இதனால் இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடர் தள்ளி வைக்கப்படுமா அல்லது ஐசிசியிடம் அனுமதி பெற்று மாற்று அணியை அனுப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் குழுவினர் பிசிசிஐ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version