கிரிக்கெட்

தோல்வி எதிரொலி; கழட்டி விடப்படும் ரவி சாஸ்திரி: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!

Published

on

நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. ஆனால் கோப்பையை இந்தியாதான் வெல்லும் என பல கிரிக்கெட் விமர்சகர்களால் கணிக்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியுடன் போராடி தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில் இந்த தோல்விக்கு காரணம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி எடுத்த தவறான முடிவு தான் என பலராலும் விமர்சிக்கப்பட்டது. இதனையடுத்து பிசிசிஐ ரவிசாஸ்திரியிடம் தோல்வி குறித்து விளக்கம் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து தற்போது தலைமை பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரி விரைவில் மாற்றப்படுவார் என்ற தகவல்களும் வெளியாகின.

இந்நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய அணிக்கான ஹெட் கோச், பேட்டிங் கோச், பௌலிங் கோச், ஃபீல்டிங் கோச், ஃபிசியோதெரபிஸ்ட், ஸ்ட்ரென்த் மற்றும் கண்டிஷனிங் கோச் மற்றும் அட்மினிஷ்ட்ரேடிவ் மேனேஜர் ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version