கிரிக்கெட்

ஆஸ்திரேலிய டெஸ்ட்… இந்திய அணியில் யார் யார் இடம்பெற்றுள்ளனர்..?

Published

on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடர், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் போட்டித் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியைத் தழுவியது. டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது.

தற்போது நாளை டிசம்பர் 17-ம் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களின் பட்டியலை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாளைய போட்டியில் அணியின் கேப்டன் ஆக விராட் கோலி விளையாடுவார். அஜிங்கியா ரஹானே துணைக் கேப்டனாக இயங்குவார். இடைவெளிக்குப் பின் தமிழகத்தின் ரவிச்சந்தர் அஸ்வின் இப்போட்டியில் விளையாடுகிறார்.

Trending

Exit mobile version