ஆரோக்கியம்

பார்லி வெஜிடபிள் உப்புமா!

Published

on

பார்லி வெஜிடபிள் உப்புமா

Barley upma

தேவையானவை:

பார்லி – 1கப்
பெ.வெங்காயம் – 1(நறுக்கவும்)
மிளகாய், கேரட் – 1(நறுக்கவும்)
பீன்ஸ் – 100 கிராம் (நறுக்கவும்)
தண்ணீர் – 3கப்
இஞ்சி – 1துண்டு(நறுக்கவும்)
கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பார்லியை மிக்சியில் லேசாக பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். அதைத்தொடர்ந்து வெங்காயம், இஞ்சி, மிளகாய் ஆகியவற்றைக் கொட்டி வதக்கவும்.
நன்கு வதங்கியதும் கேரட், பீன்ஸ் போன்றவற்றைக் கொட்டி வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் பார்லியைக் கொட்டி வதக்கவும். பின்பு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து பார்லி வெந்ததும் இறக்கிப் பரிமாறலாம்.

Trending

Exit mobile version