தமிழ்நாடு

பஞ்சாப் மாநில ஆளுனர் ஆகிறார் பன்வாரிலால் புரோஹித்

Published

on

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என குடியரசுத் தலைவரும் அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் சண்டிகர் யூனியன் பிரதேசம் நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித் பொறுப்பு வகிப்பார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து தமிழக ஆளுநராக இருந்து வரும் பன்வாரிலால் புரோகித் அவர்கள் விரைவில் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென அவர் பஞ்சாப் மாநிலத்திற்கு கூடுதல் பொறுப்பை ஏற்று உள்ளதால் விரைவில் தமிழகத்திற்கு என தனியாக ஒரு ஆளுநர் நியமனம் செய்யப்படுவர் என்று கூறப்பட்டு வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட ஒருசில ஆளுநர்கள் இரண்டு மாநில ஆளுநர் பொறுப்பையும் வகித்து உள்ளதால் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஒரே நேரத்தில் தமிழகம் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநில ஆளுநராகவும் செயல்படுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னர் தமிழகத்தின் ஆளுனராக இருந்த வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிரா மாநில ஆளுனராகவும் கூடுதல் பொறுப்பு வகித்தார் என்பது தெரிந்ததே.

Trending

Exit mobile version