இந்தியா

ஜனவரியில் மொத்தமே 31 நாட்கள்.. அதில் 14 நாட்கள் வங்கி விடுமுறையா?

Published

on

ஜனவரி மாதம் மொத்தம் 31 நாட்களே இருக்கும் நிலையில் அதில் 14 நாட்கள் வங்கி விடுமுறை என்ற அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

தற்போது முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டாலும் ஒரு சில காரணங்களுக்காக வங்கிகளுக்கு செல்லும் நிலை ஏற்படும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை தெரிந்து கொண்டால் வங்கிப்பணியை முன்கூட்டியே முடிப்பதில் சிரமமின்றி இருக்கும்.

அந்த வகையில் ஜனவரி மாதம் உள்ளூர் விடுமுறை சேர்த்து மற்றும் 14 நாட்கள் வங்கி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. சில பொதுவான நாட்கள் விடுமுறையாக இருந்தாலும் ஒரு சில உள்ளூர் பகுதியில் நடக்கும் திருவிழாக்களை பொறுத்து வங்கிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.

அந்த அவையில் உள்ளூர் மற்றும் பொது விடுமுறை ஆகியவற்றை கொண்டு ஜனவரி மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை என்பதை தற்போது பார்ப்போம்.

ஜனவரி 1 ஞாயிறு: புத்தாண்டு

ஜனவரி 2 திங்கள்: புத்தாண்டு கொண்டாட்டம் – ஐஸ்வால்

ஜனவரி 3 செவ்வாய்: இமோயினு இரட்பா – இம்பால்

ஜனவரி 4 புதன்: கான்-ங்காய் – இம்பால்

ஜனவரி 8: ஞாயிறு

ஜனவரி 12 வியாழன்: சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் – கொல்கத்தா

14 ஜனவரி: இரண்டாவது சனிக்கிழமை

15 ஜனவரி: ஞாயிறு

ஜனவரி 16 ஞாயிறு: திருவள்ளுவர் தினம் – சென்னை

ஜனவரி 17 திங்கள்: உழவர் திருநாள் – சென்னை

22 ஜனவரி: ஞாயிறு

ஜனவரி 23 ஞாயிறு: நேதாஜி பிறந்த நாள் – கொல்கத்தா

ஜனவரி 26 வியாழன்: குடியரசு தினம்/சரஸ்வதி பூஜை (ஸ்ரீ பஞ்சமி) – நாடு முழுவதும்

28 ஜனவரி: நான்காவது சனிக்கிழமை

29 ஜனவரி: ஞாயிறு

seithichurul

Trending

Exit mobile version