வேலைவாய்ப்பு

பரோடா வங்கியில் மேலாளர் வேலை!

Published

on

பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 100. Senior Relationship Manager இந்த வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 100

வேலை: Senior Relationship Manager
காலியிடங்கள்: 96
வயது: 01.03.2019 தேதியின்படி 25 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Territory Head
காலியிடங்கள்: 04
வயது: 01.03.2019 தேதியின்படி 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இரு பணியிடங்களுக்குமே ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.03.2019

Trending

Exit mobile version