இந்தியா

லாக்கரை உடைக்கும் அதிகாரம் வங்கிகளுக்கு உண்டு: ஜனவரி 1 முதல் அமல் என அறிவிப்பு!

Published

on

வங்கி லாக்கர் வாடகை செலுத்தத் தவறினால் வங்கி லாக்கரை உடைக்கும் அதிகாரம் வங்கி நிர்வாகிகளுக்கு உண்டு என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கி லாக்கருக்கான புதிய விதிமுறைகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வங்கி லாக்கருக்கு உரிய பாதுகாப்பு பெட்டக வாடகை செலுத்தத் தவறினால் அந்த லாக்கரை உடைக்க வங்கிகளுக்கு அதிகாரம் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வங்கி லாக்கரில் உள்ள பொருள்கள் வங்கி ஊழியர்களால் மோசடி நடந்தால் ஓர் ஆண்டு வாடகை போல் 100 மடங்கு இழப்பீடு தொகை வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்றும் வங்கி தீ விபத்து அல்லது இடிந்து விழுந்து சேதம் அடைந்தாலும் இந்த இழப்பீட்டை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் புயல், வெள்ளம், மின்னல், இடி, நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றத்தினால் வங்கி லாக்கர் மற்றும் லாக்கரில் உள்ள பொருள்கள் சேதம் அடைந்தால் வங்கி பொருப்பு ஏற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி லாக்கரில் சட்டத்திற்குப் புறம்பான பொருட்கள் மற்றும் அபாயகரமான பொருட்களை வைக்கக்கூடாது என்றும் மீறி வைத்தால் வாடிக்கையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி லாக்கரில் உள்ள பொருட்கள் வழங்கி நிர்வாகிகளின் கவனக்குறைவு காரணமாக சேதம் ஏற்பட்டால் வங்கி நிர்வாகிகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட புதிய விதிமுறைகள் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது என இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Trending

Exit mobile version