இந்தியா

வங்கி லாக்கர் வைத்திருக்கின்றீர்களா? ஜனவரி 1 முதல் புதிய விதிகள்!

Published

on

வீட்டில் உள்ள நகைகள் உள்பட்ட விலைமதிப்புள்ள பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வங்கி லாக்கர் வாடகைக்கு எடுப்பது பலருடைய வழக்கம் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது வங்கி லாக்கர் எடுப்பதில் புதிய விதிகள் அமல்படுத்த உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஜனவரி 1 முதல் அனைத்து வங்கி நிர்வாகங்களும் லாக்கர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுடன் இந்த ஒப்பந்தத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து முன்னணி வங்கிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு புதிய விதி குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட லாக்கர் வழிகாட்டுதலை அறிவித்து 2022ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது விதிகளை அமல்படுத்தி அதனை ஜனவரி 1 முதல் புதுப்பிக்க அறிவுறுத்தியுள்ளது.

இந்த புதிய விதிகளின் படி லாக்கரில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விலைமதிப்புள்ள பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டலோ அல்லது தீவிபத்து, கட்டிடம் இடிதல், வெள்ளம் போன்ற விபத்து ஏற்பட்டால், கூடிய வங்கி வாடிக்கையாளர்கள் லாக்கரில் வைத்து உள்ள பொருட் களுக்கு இணையாக இழப்பீடுகளை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் வங்கி லாக்கர்களை கண்காணிக்க அனைத்து வங்கிகளும் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. சிசிடிவியில் உள்ள டேட்டாக்களை 180 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் வங்கி லாக்கர்களில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை மோசடியாக எடுப்பதை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர் தங்களது லாக்கரை ஓப்பன் செய்யும் போது அந்தந்த வங்கியின் எஸ்எம்எஸ்கள் மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்ப வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாடிக்கையாளர்கள் லாக்கரை வாடகைக்கு எடுக்கும்போது மூன்று ஆண்டுகளுக்கு வாடகையாக செலுத்தவேண்டும். தற்போது லாக்கர் வைத்திருப்பவர்களும் முதலில் இதனை பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வங்கி லாக்கரை எடுத்து பயன்படுத்தி வருபவர்கள் மற்றும் புதிதாக எடுப்பவர்கள் 2023 ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய விதிகளுடன் கூடிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version