இந்தியா

ரூ.2 கோடி வரையிலான கடன்களின் வட்டிக்கு வட்டி வசூலிக்க தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published

on

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிய காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும், அந்த காலங்களில் வருமானமின்றி பல தவித்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஊரடங்கு நேரத்தில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் கூட பல திண்டாடினர்.

ஊரடங்கால் பணியை இழந்தவர்கள் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் ஆகியவற்றுக்கான இஎம்ஐ செலுத்த முடியாமல் தவித்தனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசும் ஒரு சில சலுகைகளை அவ்வப்போது அறிவித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா காலத்தில் ரூபாய் 2 கோடி வரையிலான கடன்களின் வட்டிக்கு வட்டி வசூலிக்க தடை என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த தீர்ப்பில் கொரோனா காலத்தில் கடன்களுக்கு வட்டி தள்ளுபடி செய்ய இயலாது என்றும் ஆனால் கடனுக்கு வட்டி வட்டி விதிக்கப்படுவதை ஏற்று கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூபாய் 2 கோடி வரையிலான கடனுக்கு வசூலிக்கப்பட்ட வட்டியை திருப்பி செலுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தில் வாங்கி கடன் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version