தமிழ்நாடு

2021ல் முடித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடையாதா? சர்ச்சை விளம்பரத்தால் பரபரப்பு!

Published

on

வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம் ஒன்றில் 2020-21 கல்வியாண்டில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை என்ற விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக 2020-21 ஆம் கல்வி ஆண்டில் தேர்வுகள் வைக்கப்படவில்லை என்பதும் இதனை அடுத்து அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாணவர்களின் தரம் குறித்து கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூற்ப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தனியார் வங்கி ஒன்றின் மதுரை கிளைக்கு வேலைக்கு ஆள் எடுக்க பிரபல தமிழ் முன்னணி நாளிதழில் விளம்பரம் செய்திருந்தது. அந்த விளம்பரத்தில் 28 வயதுக்கு குறைந்த பட்டதாரி ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆனால் 2021ஆம் ஆண்டு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2021 ஆம் ஆண்டு தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் செய்யப்பட்டது என்பதும் ஆன்லைனில் பார்த்து தேர்வு எழுதியதால் இந்த விளம்பரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறினர்.

இதனை அடுத்து அந்த தனியார் வங்கி அதிகாரிகள் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். இந்த விளம்பரம் தவறாக இடம்பெற்றுவிட்டதாகவும், 2021 ஆம் ஆண்டு டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்பதற்கு பதிலாக 2021 ஆம் ஆண்டு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க கூடாது என தவறாக பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் தற்போது திருத்தப்பட்ட விளம்பரம் மீண்டும் வெளியாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய விளம்பரத்தின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வருவதை அடுத்து 2020-21 கல்வி ஆண்டில் டிகிரி முடித்தவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version