இந்தியா

ஏப்ரல் மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கி விடுமுறையா? அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்

Published

on

இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான விடுமுறை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் மாதத்திற்கு 15 நாட்கள் விடுமுறை தினங்களாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இதோ:

01.04.2022 – வங்கிக் கணக்குகளின் வருடாந்திர மூடல் – அனைத்து மாநிலங்களிலும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

02.04.2022 – குடி பத்வா/உகாதி விழா/நவராத்திரியின் முதல் நாள்/தெலுங்கு புத்தாண்டு/சஜிபு நோங்கம்பாம்பா (சைரோபா) – பேலாபூர், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி மற்றும் ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

03.04.2022 – ஞாயிற்றுக்கிழமை – வார விடுமுறை

04.04.2022 – சாரிஹுல்-ராஞ்சி வங்கிகளுக்கு விடுமுறை.

05.04.2022 – பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள் – ஹைதராபாத் வங்கிகளுக்கு விடுமுறை.

09.04.2022 – சனிக்கிழமை – மாதத்தின் 2வது சனிக்கிழமை

10.04.2022 – ஞாயிற்றுக்கிழமை – வார விடுமுறை

14.04.2022 – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/ மகாவீர் ஜெயந்தி/ பைசாகி/ தமிழ் புத்தாண்டு/ சைரோபா, பிஜூ விழா/ போஹர் பிஹு – ஷில்லாங் மற்றும் சிம்லாவைத் தவிர மற்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

15.04.2022 – புனித வெள்ளி / பெங்காலி புத்தாண்டு / ஹிமாச்சல் நாள் / விஷு / போஹாக் பிஹு – ஜெய்ப்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் தவிர மற்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

16.04.2022 – போஹாக் பிஹு – கவுகாத்தி வங்கிகளுக்கு விடுமுறை.

17.04.2022 – ஞாயிற்றுக்கிழமை – வார விடுமுறை

21.04.2022 – கடியா பூஜை – அகர்தலாவில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன

23.04.2022 – சனிக்கிழமை – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை

24.04.2022 – ஞாயிற்றுக்கிழமை – வார விடுமுறை

29.04.2022 – ஷப்-இ-கத்ர்/ஜுமாத்-உல்-விடா – ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் வங்கிகளுக்கு விடுமுறை.

 

Trending

Exit mobile version