கிரிக்கெட்

5வது டி20 போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்ற வங்கதேசம்

Published

on

உலகின் வலுவான அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த நிலையில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் வங்கதேச அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இதனை அடுத்து நடைபெற்ற 2வது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வீழ்த்தியது. மேலும் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் வங்கதேச அணி ஏற்கனவே தொடரை வென்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நான்காவது டி20 போட்டியில் மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைத்த நிலையில் நேற்று ஐந்தாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 20 ஓவர்களில் 122 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 17.4 ஓவர்களில் வெறும் 62 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் ஒன்பது பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கங்களில் தங்களுடைய விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து 4-1 என்ற புள்ளி கணக்கில் வங்கதேச அணி அபாரமாக தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் முன்னணி அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவை வங்கதேச அணி தனது சொந்த மண்ணில் 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி உள்ளது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Trending

Exit mobile version