உலகம்

பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை – வங்க தேசம் அரசு அதிரடி முடிவு!

Published

on

வங்க தேசத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா போன்றே வங்க தேசத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. அண்மைக் காலமாக அது இன்னும் அதிகரித்துள்ளதால் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் கடுமையாக முடிவு செய்தது.

இந்நிலையில் வங்க பிரதமர் ஷேக் அஹ்சினா தலைமையிலான அமைச்சரவை, வங்க தேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டால் மரண தண்டனை வழங்கும் அரசாணைக்கு ஓப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து பேசிய வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினா, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக பட்ச தண்டனை, மரண தண்டனைதான் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் தற்போது வங்கதேசத்தில் ஏதேனும் வழக்குகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு இருந்தாலும், அது மரண தண்டனையாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version