கிரிக்கெட்

ருத்ர தாண்டவம் ஆடிய வங்கதேசம்: அடேங்கப்பா செம்ம மேட்ச்!

Published

on

வங்கதேச அணி ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் ஏதாவது ஒரு அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும். அந்த வகையில் வங்கதேசத்தின் அதிர்ச்சி வைத்தியம் இந்தமுறையும் தொடர்கிறது. தனது வித்தையை இந்தமுறை மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக காட்டி கவனத்தை ஈர்த்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 23-வது லீக் போட்டி டாண்டன் மைதானத்தில் நேற்று வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 ரன்னில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தாலும் பின்னர் வந்த அனைவரின் பொறுப்பான ஆட்டத்தால் ரன் குவிப்பில் ஈடுபட்டது. அதன்படி 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹோப் 96 ரன்களையும், லெவிஸ் 70 ரன்களையும் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில் முகமது சைஃபுதின் மற்றும் முஸ்தஃபிர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 322 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியது வங்கதேச அணி. அவ்வளவு எளிதில் சாத்தியப்படாத இந்த இலக்கை அனாசியமாக அடைந்தது வங்கதேசம்.

ஓரளவு சிறப்பான தொடக்கம் வங்க தேசத்துக்கு அமைய பின்னர் வந்த வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். குறிப்பாக ஷகிப் அல் ஹாசன் 99 பந்துகளில் 124 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 322 ரன்கள் என்றை இமாலய இலக்கை வங்கதேச அணி 41.3 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை இழந்து அடைந்தது. 41.3 ஓவர்களில் 322 ரன்கள் எடுத்த வங்கதேச அணியை 50 ஓவர்கள் ஆட விட்டிருந்தால் உலகக் கோப்பையில் யாரும் செய்யாத சாதனையை நிகழ்த்தி இருப்பார்கள்.

வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹாசன் 124 ரன்களும், லிட்டன் தாஸ் 94 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில், ரஸ்ஸல் மற்றும் தாமஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். அதிரடியாக ஆடி 124 ரன்கள் அடித்த ஷகிப் அல் ஹாசன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக வங்க தேசம் அணி தென்னாப்பிரிக்கா அணிக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தப்போட்டி: ஆஃப்கானிஸ்தான் Vs இங்கிலாந்து
இடம்: மான்செஸ்டர்
நேரம்: மாலை 3 மணி

author avatar
seithichurul

Trending

Exit mobile version