தமிழ்நாடு

ஹவுஸ்ஃபுல் போர்டை தொங்கவிட்ட மயான ஊழியர்கள்: பெங்களூரில் பரபரப்பு

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையையும் உலகையே அச்சுறுத்தி வருகிறது.

குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் தினமும் நூற்றுக்கணக்கானோர் கொரோனாவால் பலியாகி வருகின்றனர். பலியானவர்களை இறுதிச்சடங்கு செய்வதற்கு உறவினர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பெங்களூரு மயானத்தில் 24 மணி நேரமும் பிணங்கள் எரிந்து கொண்டிருப்பதாகவும் பிணங்களை அடக்கம் செய்யவும் தகனம் செய்யவும் வரிசையில் உறவினர்கள் காத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் பெங்களூரில் உள்ள முக்கிய மயானத்தில் ஹவுஸ்புல் போர்ட்டி மாட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்கு உள்ள தகன மேடைகளில் பிணங்கள் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால் கூடுதலாக பிணங்கள் வந்து கொண்டிருப்பதை அறிந்த மயான ஊழியர்கள் ஹவுஸ்புல் போர்டை மாட்டியுள்ளனர்.

இதனால் கொரோனாவால் உயிரிழந்த உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இது குறித்த காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version