கிரிக்கெட்

6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி!

Published

on

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியில் பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதிய நிலையில் பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் அடித்தது. இதனை அடுத்து 150 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் 54 ரன்களும், மனிஷ் பாண்டே 38 ரன்கள் அடித்தும் நல்ல தொடக்கத்தை கொடுத்த போதிலும் அதன் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் அந்த அணி தோல்வி அடைந்தது.

நேற்றைய போட்டியில் சிராஜ் மற்றும் மார்ஷல் ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும், சபாஸ் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர் அணியின் மாக்ஸ்வெல் 59 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version