சினிமா செய்திகள்

சாக்கு மூட்டையில் பிணமாக காணாமல் போன நடிகை: கணவரே கொலை செய்தாரா?

Published

on

வங்கதேசத்தைச் சேர்ந்த நடிகை ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில் அவர் தற்போது சாக்கு மூட்டையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் வங்கதேச திரையுலகினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வங்காளதேசத்தின் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரைமா இஸ்லாம் சிமு. 45 வயதான இவர் அந்நாட்டின் திரைப்படங்களில் நடித்து வந்தார் என்பதும் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இவர் திடீரென காணவில்லை என அவரது உறவினர்கள் காவல் துறையில் புகார் அளித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகாரின் அடிப்படையில் வங்கதேச போலீசார் நடிகை ரைமாவை தேடி வந்த நிலையில் தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியில் ஒரு சாக்குமூட்டையில் ரைமா உடலை கண்டெடுத்தனர்.

இதனை அடுத்து அவரது உறவினர்கள் ரைமாவின் உடலை உறுதி செய்த பின்னர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை ரைமாவை அவரது கணவரை போலீசார் விசாரணை செய்ததில் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ரைமாவை கொலை செய்து பிணத்தை சாக்குமூட்டையில் போட்டு புறநகர் பகுதிகள் போட்டதாக ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version