இந்தியா

வாழைப்பழங்களின் விலை ரூ.80ஆ? மும்பையில் விஷம்போல் ஏறும் விலைவாசி?

Published

on

ஏழை எளிய மக்கள் சாப்பிடும் பழங்களில் ஒன்று வாழைப்பழம் என்பதும் வாழைப்பழம் மட்டும் தான் விலை மலிவாக இருப்பதால் அனைத்து பிரிவு மக்களும் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதும் தெரிந்ததே. ஆனால் மும்பையில் வாழைப்பழத்தின் விலை விசம் போல் ஏறி இருப்பதை பார்த்து பவுது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவின் நிதித் தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பை நகரம் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த இடமாக கருதப்படுகிறது. வீட்டுவசதி தவிர, தினசரி உணவுகளின் விலையும் அதிகரித்து வருகிறது. அதிகம் நுகரப்படும் பழங்களில் ஒன்றான வாழைப்பழங்கள் இப்போது மும்பையில் ஒரு டசனுக்கு ரூ.80 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முன்னணி ஊடகம் ஒன்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக, பாந்த்ரா மேற்கு, அந்தேரி மேற்கு, கர், மாட்டுங்கா, போரிவிலி மற்றும் பிரீச் கேண்டி போன்ற பகுதிகளில், ஒரு டஜன் வாழைப்பழங்களின் விலை, 50 முதல், 60 ரூபாய் என விற்பனையாகி வந்த நிலையில் தற்போது 80 ரூபாயாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக இலைச்சி வாழைப்பழத்தின் விலை ஒரு டசனுக்கு 80 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மொத்த விலையில் ஒரு கிலோ சராசரியாக 32-42 ரூபாய் முதல் 7-8 வாழைப்பழங்கள் வரை விலை போகிறது என்றும் கூறப்படுகிறது.

வர்த்தகர்கள் இதுகுறித்து கூறியபோது, லாக்டவுனுக்கு பிறகு வாழை விவசாயிகள் வாழையை பயிரிட தயக்கம் காட்டுவதால், பழங்களின் பற்றாக்குறையே விலை உயர்வுக்குக் காரணம் என்றும், பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தேவைக்கு ஏற்ப விலை அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.

லாக்டவுனுக்கு பிறகு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் வாழைப்பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர் ஒருவர் கூறினார். ஓமன், கத்தார், ஈரான் போன்ற பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாலும் வாழைப்பழங்களின் விலை உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

வாழைப்பழங்கள் மட்டுமின்றி முட்டையின் விலையும் மும்பையில் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் முட்டை விலை டசன் ஒன்றுக்கு ரூ.90 ஆக உயர்ந்தது. அந்தேரி, லோகந்த்வாலா, பாந்த்ரா போன்ற இடங்களில் உள்ள வியாபாரிகள் முட்டையை 90 ரூபாய்க்கு விற்கத் தொடங்கினர். கடந்த இரண்டு வாரங்களில் ஒரு டஜன் முட்டையின் விலை சுமார் ரூ.12 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version