கிரிக்கெட்

#BANvsIND | 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

Published

on

#BANvsIND | வங்கதேசம் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது.

முதல் போட்டியை ஏற்கனவே இந்தியா வென்று இருந்த நிலையில், இன்று 2வது டெஸ்ட் போட்டியையும் வென்று 2-0 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

முதலில் ஆடிய வங்கதேசம் அணி 227 ரன்கள் அடித்திருந்த போது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 314 ரன்கள் அடித்து இருக்கும் பொது 10 விக்கெட்களையும் இழந்தது.

பின்னர் தொடங்கிய இரண்டாவது இன்ங்சில் 231 ரன்கள் அடித்திருந்த போது 10 விக்கெட்களையும் வங்கதேசம் இழந்தது.

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் 7 பந்துகளுக்கு 2 ரன்கள் அடித்து இருக்கும் பொது ஷாகிப் அல் ஹாசன் போட்ட பந்தில் நூருல் ஹாசனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதிகபட்சமாக 49 பந்துகளுக்கு 34 ரன்களை ஏ.ஆர்.படேல் அடித்தார். ஷ்ரேயஸ் ஐயர் 46 பந்துகளுக்கு 29 ரன்களும், ரவிச்சந்திரன் அஷ்வின் 62 பந்துகளுக்கு 42 ரன்களும் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்கள்.

மொத்தம் 6 விக்கெட்கள், 54 ரன்கள் எடுத்த ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இதுவரையில் வங்கதேசத்துக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிரா ஆகியுள்ளன. 2015-ம் ஆண்டுக்கு பிறகு வங்க தேசத்துக்கு எதிராக 5 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version