தமிழ்நாடு

தனியார் செட்டாப் பாக்ஸுக்கு தடையா?

Published

on

அரசு கேபிள் ஆப்ரேட்டர்கள் தனியார் செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேபிள் டிவிகள் செட்டாப் பாக்ஸ்கள் இல்லாமல் முதலில் இணைப்புகள் வழங்கப்பட்டு வந்தது. அப்போது சரியாக சேனல்கள் தெரிவதில்லை, குறைந்த சேனல்கள் மட்டுமே வருகிறது. அவ்வப்போது கேபிள் டிவி கட் ஆகிவிடுகிறது என தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

கேபிள் டிவி, டிஷ் டிவி என அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தரமான சேவை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில், செட்டாப் பாக்ஸ்கள் இல்லாமல் கேபிள் டிவி பார்க்க முடியாது என்ற நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டனர்.

தமிழ்நாட்டில் தனியார் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சில சேனல்களை ஒளிபரப்புவதில்லை என்ற புகாரின் பேரில், மாநில அரசு சார்பில் அரசு கேபிள் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்த நிறுவனம் கீழ் வாடிக்கையாளர்களுக்கு செட்டாப் பாக்ஸ் மூலம் கேபிள் டிவி இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கும் செட்டாப் பாக்ஸ் இல்லாமல் தாங்களும் தனியாக செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்து கேபிள் டிவி இணைப்புகளை வழங்கி வந்தனர்.

இப்போது அதற்குத் தடை விதித்துள்ள அரசு கேபிள் டிவி நிறுவனம், தனியார் செட்டாப் பாக்ஸ்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version