சினிமா செய்திகள்
தமிழ் ராக்கர்ஸில் ‘நம்ம வீட்டு பிள்ளை’ தடை வாங்கிய சன் பிக்சர்ஸ்!
![Namma veetu pillai - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/09/Namma-veetu-pillai.jpg)
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தை இணையதளங்களில் அனுமதியின்றி வெளியிட நீதிமன்றம் சென்று தடை உத்தரவைப் பெற்றுள்ளது சன் பிக்சர்ஸ்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இன்று திரைக்கு வந்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இந்த படத்தை இணையதளங்கள், கேபிள் டிவி போன்றவற்றில் வெளியிட தடை கோரி சென்னை நீதிமன்றத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது,
வழக்கை விசாரித்து நீதிபதி சதீஷ் குமார், நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தை 6,455 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் வெளியிடத் தடை என உத்தரவிட்டுள்ளார்.